அடித்துக் கொல்லப்பட்ட காவற்துறை அதிகாரி!!
27 சித்திரை 2025 ஞாயிறு 12:50 | பார்வைகள் : 7695
பரிசில் ஒரு காவற்துறை அதிகாரி கொல்லப்பட்டுள்ளார்.
விடுப்பில் நின்ற ஒரு காவற்துறை அதிகாரி, தனது நண்பர்களுடன் ஒரு மது அருந்தகத்தில் இரவிரவாக இருந்தபோது வேறு ஒருவருடன் ஏற்பட்ட தகறாரில் கொல்லப்பட்டுள்ளார்.
பரிஸ் 6 இலுள்ள The Mazet மது அருந்தகத்தின் வாயிலில் அதிகாலையில் ஏற்பட்ட ஒரு வாக்குவாதத்தால், அடித்துக் கீழே வீழ்த்தப்பட்ட அதிகாரி சாவடைந்துள்ளார்.
பலரின் சாட்சியத்தின் பேரில் தள்ளிவிட்டவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சாவடைந்த காவற்துறை அதிகாரி 33 வயதுடையவர் என்றும், இவர் வல்-துவாஸ் (Val-d'Oise) படையணியைச் சேர்ந்தவர் என்றும், தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடமையிலிருந்த நீதிபதி சம்பபவ இடத்திற்குச் சென்று, உடனடியாக உடற்கூற்றுப் பரிசோதனை செய்து, சாவிற்கான காரணத்தை விரைவாக அறியுமாறு ஆணையிட்டுள்ளார்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À vendre : bail d’un salon
À vendre : bail d’un salon de beauté d’une surface de 30 m² situé à Fontenay-sous-Bois.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan