பரிஸ் : பெண் காவல்துறை வீரரை மோதிய பேருந்து சாரதி கைது!!

27 சித்திரை 2025 ஞாயிறு 12:19 | பார்வைகள் : 756
பெண் காவல்துறை வீரர் ஒருவரை மோதித்தள்ளிய பேருந்து சாரதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஏப்ரல் 26, நேற்று சனிக்கிழமை மாலை இச்சம்பவம் பரிஸ் 10 ஆம் வட்டாரத்தின் Rue La Fayette வீதியில் இடம்பெற்றுள்ளது. மாலை 5.30 மணி அளவில் காவல்துறையினர் வீதி கண்காணிப்பில் ஈடுபட்டிருந்த நிலையில், தடை செய்யப்பட்ட பொருட்களை விற்பனை செய்து வந்த நபர் ஒருவரை கைது செய்ய முற்பட்டனர். அதன்போது 45 ஆம் இலக்க பேருந்து ஒன்று பெண் காவல்துறை வீரரை மோதியதில். இதில் அவர் காயமடைந்தார்.
அதை அடுத்து, பேருந்து சாரதி கைது செய்யப்பட்டார். விசாரணைகள் இடம்பெற்று வருகிறது.