கிரனோபிள் தாக்குதல்கள் - மேலதிக விபரங்கள்!!
27 சித்திரை 2025 ஞாயிறு 08:41 | பார்வைகள் : 7357
கிரனோபிளில் நடந்த துப்பாக்கிச் சூடுகளிற்கான மேலதிக விபரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
கிரனோபிள் நகரில் நடந்த துப்பாக்கி சூட்டுத் தாக்குதலில் மொத்தமாக நால்வர் காயமடைந்துள்ளனர்.
வில்நெவ்வில் நடந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் காயமடைந்தவர் உடலில் நான்கு குண்டுகள் பாய்ந்துள்ளன எனவும் அவர் உயிர் ஆபத்தான நிலையில் உள்ளது எனவும் அவசர சிகிச்சைப் படையினர் தெரிவித்துள்ளன.
ஆனால், இந்த மூன்று சம்பவங்களிற்கும் எந்தவிதத் தொடர்புகளும் இல்லை எனவும் காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.
ஆனாலும் இந்தச் சம்பவங்களிற்கிடையில் போதைப்பொருள் என்ற தொடர்புகள் மட்டும் உள்ளன எனக் காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதில் இரண்டு துப்பாக்கிச் சூட்டுச சம்பவங்கள் கொலை முயற்சிகள் எனவும் மூன்றாவது வெறும் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் என்றும் காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.
22 வயது இளைஞனைக் முதலுதவிப்படையினர் பொறுப்பேற்போது துப்பாக்கியின் பிடியால் முகத்தில் பலமாக அடிக்கப்பட்டிருந்தது.
இரு வேறு சம்பவங்களாகப் பிரித்தே விசாரணைகள் ஆரம்பமாகி உள்ளன.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À vendre : bail d’un salon
À vendre : bail d’un salon de beauté d’une surface de 30 m² situé à Fontenay-sous-Bois.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan