யாழில் உயிரியல் விஞ்ஞான பிரிவில் இரட்டையர்கள் சாதனை!

27 சித்திரை 2025 ஞாயிறு 07:15 | பார்வைகள் : 1612
2024ஆம் ஆண்டிற்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை முடிவுகளின் அடிப்படையில் உயிரியல் விஞ்ஞான பிரிவில் யாழ்.இந்துக் கல்லூரியை சேர்ந்த இரண்டு மாணவர்கள் மாவட்ட மட்டத்தில் முதல் இரு இடங்களை பெற்றுள்ளனர்.
மேலும் குறித்த இருவரும் தேசிய மட்டத்தில் மூன்றாம் மற்றும் ஐந்தாம் இடங்களை பெற்றுள்ளனர்.
சி.ஜமுனானந்தா பிரணவன்(முதலாம் இடம்) மற்றும் சி.ஜமுனானந்தா சரவணன்(இரண்டாம் இடம்) ஆகிய இருவருமே இவ்வாறு உயர்தரத்தில் உயிரியல் விஞ்ஞான பிரிவில் சாதனை படைத்துள்ளனர்.
மேலும், குறித்த மாணவர்களின் தந்தை யாழ். போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
9 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

RAJADURAI
FRANCE (SARCELLES ), BROWN ROAD KALATDI
வயது : 44
இறப்பு : 14 Aug 2025
-
1