சீரற்ற காலநிலை.. 7 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!

27 சித்திரை 2025 ஞாயிறு 06:00 | பார்வைகள் : 633
இன்று ஏப்ரல் 27 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை - சீரற்ற காலநிலை காரணமாக நாட்டின் 7 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நாட்டின் தென்கிழக்கு மாவட்டங்களான Alpes-de-Haute-Provence, Hautes-Alpes, Bouches-du-Rhône, Gard, Lozère, Var மற்றும் Vaucluse ஆகிய ஏழு மாவட்டங்களில் இடி மின்னல் தாக்குதல்களுடன் கூடிய மழை பதிவாகும் என எச்சரிக்கப்பட்டு அங்கு ‘மஞ்சள்’ நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இன்று நண்பகலின் பின்னர் இந்த சீரற்ற காலநிலை நிலவும் என தெரிவிக்கப்படுகிறது. வெளி மாவட்டங்களில் இருந்து குறித்த எச்சரிக்கை விடுக்கப்பட்ட மாவட்டங்களுக்கு செல்பவர்கள் இது தொடர்பில் அவதானமாக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.