கானொளிப்பதிவில் சிக்கிய பள்ளிவாசல் கொலையாளி!!

26 சித்திரை 2025 சனி 14:37 | பார்வைகள் : 1043
நேற்று La Grand-Combe (Gard) பள்ளிவாசலில் ஒருவரைக் குத்திக் கொன்றுவிட்டுத் தப்பியோடிய குற்றவாளி அடையாளம் காணப்பட்டுள்ளான். ஆனாலும் இன்னமும் காவற்துறையினரிடம் சிக்கவில்லை.
இவர் இந்தப் பளிளிவாசலிற்கு என்றுமே வராதவன் என்றும், கொலை செய்யும் நோக்கத்துடன் மட்டுமே உள்ளே வந்துள்ளான் எனவும், தெரிவித்துள்ளனர்.
இந்தக் கொலை இஸ்லாமிய வெறுப்பின் (islamophobe) காரணமாக நடந்திருக்கலாம் என்ற நோக்கிலேயே விசாரணைகள் தொடர்கின்றன.
இந்தக் கொலையைச் செய்ய முதல் «உன் கடவுள் அல்லா அருவருப்பானவன்» எனக் கூறிக் கத்தியால் குத்தியுள்ளான். இந்தப் கொலையைத் தன் அலைபேசியில் காணொளியாகப் பதிவும் செய்துள்ளான்.
இவையனைத்தும் அந்தப் பள்ளிவாசிலில் வெளியேயும் உள்ளேயும் பொருத்திவைக்கப்பட்ட கண்காணிப்பு ஒளிப்பதிவில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இது காவற்துறையினரின் தேடுதலையும் விரைவுபடுத்த உதவியாக இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.