உயர்தர பரீட்சை பெறுபேறுகள் வெளியானது

26 சித்திரை 2025 சனி 13:23 | பார்வைகள் : 1191
2024 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சை பெறுபேறுகள் வெளியாகியுள்ளதென பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதன்படி https://www.doenets.lk/ எனும் இணையத்தளத்திற்குப் பிரவேசிப்பதன் மூலம் பரீட்சை பெறுபேறுகளைப் பார்வையிட முடியும்.
2024 ஆம் ஆண்டு உயர்தர பரீட்சை 2,312 பரீட்சை மத்திய நிலையங்களில் நடைபெற்றது.
அனர்த்த நிலைமையின் காரணமாக அதன் நேர அட்டவணையில் சில மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டன.
2024 ஆம் ஆண்டில் 333,185 பேர் உயர்தர பரீட்சைக்குத் தோற்றுவதற்குத் தகுதி பெற்றிருந்ததுடன், அவர்களில் 253,390 பேர் பாடசாலை பரீட்சார்த்திகளாவர்.
அத்துடன் 79,795 தனிப்பட்ட பரீட்சார்த்திகள் பரீட்சைக்குத் தோற்றியமை குறிப்பிடத்தக்கது.
11 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

RAJADURAI
FRANCE (SARCELLES ), BROWN ROAD KALATDI
வயது : 44
இறப்பு : 14 Aug 2025
-
3