யாழில் சிக்கன்குனியா தொற்றினால் பாதிக்கப்பட்ட நால்வர்

26 சித்திரை 2025 சனி 12:55 | பார்வைகள் : 163
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் நால்வருக்கு சிக்கன்குனியா உறுதி செய்யப்பட்டுள்ளது என்று யாழ்ப்பாண பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் கேதீஸ்வரன் தெரிவித்தார்.
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கடந்த புதன்கிழமை நால்வர் சிக்கன்குனியா அறிகுறிகளுடன் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர்.
அவர்களில் நால்வருக்கு சிக்கன்குனியா உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த விடயம் தொடர்பில் கூடுதலான அவதானத்தைச் செலுத்தியுள்ளோம் என மேலும் தெரிவித்தார்.