போப்பாண்டவர் : பிரான்ஸ் - அமெரிக்க ஜனாதிபதிகள் கை குலுக்கிக்கொண்டனர்!!

26 சித்திரை 2025 சனி 13:03 | பார்வைகள் : 695
போப்பாண்டவர் பிரான்சிஸ் அவர்களின் இறுதிச்சடங்கு இடம்பெற்று வருகிறது. பிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் கலந்துகொண்டுள்ளார்.
200,000 பேர் கலந்துகொண்டுள்ள இந்த நிகழ்வு St. Peter's Basilica தேவாலய முன்றலில் இடம்பெற்று வருகிறது. கிட்டத்தட்ட 50 நாடுகளைச் சேர்ந்த ஜனாதிபதிகள், பிரதமர்கள் கலந்துகொண்டுள்ளனர்.
ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன், முதல் பெண்மணி பிரிஜித் மக்ரோன் ஆகிய இருவரும் கலந்துகொண்டு போப்பாண்டவருக்கு அஞ்சலி செலுத்தினர்.
பின்னர் அவர்களுக்குரிய இடத்துக்காக அவர்கள் சென்றபோது, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புடன் இருவரும் கைகுலுக்கிக்கொண்டனர். மிக நீண்ட நேரம் இந்த கைகுலுக்கல் இடம்பெற்றதை அவதானிக்கக்கூடியதாக இருந்தது.