பள்ளிவாசலிற்குள் கத்திக்குத்தும் கொலையும்!!

26 சித்திரை 2025 சனி 10:22 | பார்வைகள் : 6077
La Grand-Combe (Gard) இலுள்ள பள்ளிவாசலிற்குள் படுகொலை நடந்துள்ளது.
நேற்று வெள்ளிக்கிழமை காலை எட்டு மணியளவில் இந்தப் பளிவாசலிற்குற் தொழுகைக்காக இருவர் மட்டுமே இருந்துள்ளனளர்.
அந்தச் சமயம் அதில் ஒருவர் மற்றையவர் மீது கத்தியால் பல குத்துகள் குத்திவிட்டு அவரைச் சாகவிட்டு விட்டுத் தப்பியோடி உள்ளார்.
அதனைத் தொடர்ந்து 11 மணியளவில் தொழுகைக்கு வந்தவர்கள், ஒரு நபர் இரத்தவெள்ளத்தில் சாவடைந்து கிடந்தததைக் கண்டுள்ளனர் என, Gard நகரத்தின் சட்டமா அதிபர் தெரிவித்துள்ளார்.
«இந்தக் கொடூரச் சம்பவத்தின் குற்றவாளியைப் பிடிப்பதுடன், இந்தச் சம்பவத்தின் உண்மைத்தன்மையை வெளியே கொண்டுவரவேண்டும். கொல்லப்பட்டவரின் குடும்பத்திற்கு எனது ஆறுதலையும், இஸ்லாமிய சமூகத்திற்கு அவர்களின் பெருநாளில் எங்களது ஒற்றுமையான உணர்வையும் வெளிப்படுத்த விரும்புகின்றேன்»
என உள்துறை அமைச்சர் புரூனோ ரத்தையூ தனது X தளத்தில் தெரிவித்துள்ளார்.
இந்த விசாரணைகள் Gard நகர ஜோந்தார்மினரிடமும், நீம் நகரத்தின் விசாரணைப்பிரிவினரிடமும் ஒப்படைக்கப்பட்டுள்ளது.