நீதிமன்ற விசாரணைகளுக்காக பரிஸ் வருகிறார் கிம் கடாஷியன்!!
26 சித்திரை 2025 சனி 07:00 | பார்வைகள் : 11284
பிரபல மொடலும், நடிகையுமான கிம் கடாஷியன் வீட்டில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவம் தொடர்பிலான நீதிமன்ற விசாரணைகளுக்காக அவர் பரிசுக்கு வருகை தர உள்ளார்.
ஏப்ரல் 28, திங்கட்கிழமை வழக்கு விசாரணை ஆரம்பமாக உள்ளது. கடந்த 2016 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 2 ஆம் திகதி இரவு அவரது வீட்டில் கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றது. மொத்தமாக €9 மில்லியன் யூரோக்கள் பெறுமதியுடைய நகைகள் கொள்ளையிடப்பட்டிருந்தன. அவை இதுவரை கண்டுபிடிக்கப்பட்டு மீட்கப்படவில்லை.
இந்நிலையில், இக்கொள்ளைச் சம்பவத்தில் 12 பேர் குற்றவாளிகளாக அடையாளம் காணப்பட்டனர். அவர்களில் 10 பேர் மட்டுமே உயிருடன் இருப்பதாகவும், அவர்கள் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இக்கொள்ளைச் சம்பவத்தில் சுவாரஷ்யமான விடயமாக, கொள்ளையில் ஈடுபட்ட அனைவரும் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் (2016 ஆம் ஆண்டில்) என தெரிவிக்கப்படுகிறது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
1 நாள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
10 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்
















Ajouter
Annuaire
Scan