நோந்த் - 57 கத்திக்குத்துகள் - என்ன நடந்தது - சட்டமா அதிபர்!
25 சித்திரை 2025 வெள்ளி 21:58 | பார்வைகள் : 9895
நேற்றைய நோந்த் தாக்குதல் குறித்து இன்று மாலை நோந்த் நகரத்தின் சட்டமா அதிபர் (procureur de la République) ஊடகச் செய்தி ஒன்றை வழங்கியுள்ளார்.
கத்திக்குத்தில் ஈடுபட்ட 16 வயதுடைய மாணவன் இந்த தனியார் கல்லூரியில் கடந்த 2021ம் ஆண்டிலிருந்து கல்வி கற்றுள்ளான்.
சம்பவ தினத்தன்று கட்டத்தின் மாடியிலுள்ள கழிப்பறைக்குச் சென்று கத்தியால் தனது நெற்றியில் அடையாளமிட்டு விட்டு அருகிலுள்ள கணக்கு வகுப்பிற்குச் சென்று, குறித்த நபரைப் பற்றிக் கேட்டபோது, அவன் அங்கு இல்லை எனக் கூற மீண்டும் கழிவறைக்குச் சென்றுள்ளான்.
அங்கு தனது புத்தகப்பையை வைத்து விட்டு, முகத்திற்கு முகமூடி போட்டுவிட்டு, மீண்டும் அந்த வகுப்பறைக்குச் சென்று எதுவும் பேசாமல் அங்கிருந்த ஒரு மாணவியை குத்து குத்து என்று கத்தியால் குத்தியுள்ளான்.
இந்த மாணவி மீது மட்டும் இவன் தலையிலிருந்து கழுத்து, நெஞ்சு என்று 57 தரம் குத்தியுள்ளான். இதில் கழுத்து நரம்புகள் அறுக்கப்பட்டு அந்தப் பெண் சாவடைந்துள்ளார்.
மற்றைய மாணவர்களும் ஆசிரியரும், அங்கிருந்து தப்பியோட அவர்களைத் துரத்திச் சென்று விட்டு. அருகிலிருந்த ஆங்கில வகுப்பிற்குள் புகுந்து மூன்று மாணவர்களைக் குத்தி உள்ளான். இதில் இரண்டு மாணவர்களும் ஒரு மாணவியும் படுகாயமடைந்துள்ளனர். ஒருவர் உயிராபத்தான நிலையில் உள்ளார்.
இந்தச் சம்வத்தைக் கண்ட ஒரு கணிணித் தொழில் வல்லுநர், கதிரையால் கத்தியுடன் நின்ற மாணவனைப் பலமாகத் தாக்கி உள்ளார். அங்கிருந்து ஓடியவன் ஒரு மாடிப்படியின் முடிவில் சிக்கியுள்ளான். அவனை அவர் மடக்கி உள்ளார். பின்னர் வேறு ஆசிரியர்களும் இணைந்து மடக்கிப் பிடித்துக் கட்டி உள்ளனர்.
இவனது புத்தகப் பையில் ஒரு போலி COLY 45 துப்பாக்கியும் இருந்ததைக் கண்டு காவற்துறையினர் எடுத்துள்ளனர்.
இவன் தற்போது மனநல சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளான். அதன் பின்னரே விசாரணைகள் ஆரம்பிக்கப்படும் என சட்டமா அதிபர் தெரிவித்துள்ளார்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
11 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
20 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan