Paristamil Navigation Paristamil advert login

இரவு உணவை சீக்கிரம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!

இரவு உணவை  சீக்கிரம் சாப்பிடுவதால் கிடைக்கும்  நன்மைகள்!

25 சித்திரை 2025 வெள்ளி 15:14 | பார்வைகள் : 141


பொதுவாக நாம் 3 வேளை உணவை நம் மனதிற்கு ஏற்றவாறு அல்லது கிடைக்கும் நேரத்திற்கு ஏற்றவாறு சாப்பிட்டு வருகிறோம். ஆனால் " காலை உணவை ராஜாவை போல, மதிய உணவை இளவரசனை போல, இரவு உணவை ஏழையை போல சாப்பிடுங்கள்" என்ற பழமொழியை நாம் அடிக்கடி கேள்விப்பட்டிருப்போம். அது ஏன் இரவு உணவை மட்டும் சிறிதளவு அல்லது மிதமாக சாப்பிட பரிந்துரைக்கப்படுகிறது என்று யோசித்திருக்கிறீர்களா.!! இரவு சாப்பிட்ட சில மணி நேரங்களுக்கு பிறகு சுமார் 7 முதல் 8 மணி நேரங்கள் தூக்கம் காரணமாக உடல் செயலற்ற நிலையில் இருப்பதால் இரவு உணவை லைட்டாக மற்றும் மிதமாக எடுத்து கொள்ள அறிவுறுத்தப்படுகிறது.

அதே போல நம் உடல் உணவை ஜீரணிக்க போதுமான நேரம் கிடைக்க, தூங்க செல்வதற்கு குறைந்தது 3 மணி நேரத்திற்கு முன்பே சாப்பிட நிபுணர்கள் அறிவுறுத்துகிறார்கள். ஒருவேளை நீங்கள் மொத்தமான தூக்க முறையை பின்பற்றுவர் என்றால் உதாரணதிற்கு நீங்கள் அதிகாலை 1 மணிக்கு தூங்குபவர் என்றால் இரவு 10 மணிக்கு சாப்பிட வேண்டும் என்பது அர்த்தமல்ல..எனவே, இரவு உணவு சாப்பிட சிறந்த நேரம் எது? தொடர்ந்து படியுங்கள்...

எப்போதுமே சரியான நேரத்தில் இரவு உணவை எடுத்து கொள்வது நம் ஆரோக்கியத்தில் பெரிய நேர்மறை தாக்கத்தை ஏற்படுத்தும். குறிப்பாக இரவு உணவை சீக்கிரமாக (மாலை 6 முதல் 7 மணிக்குள்) சாப்பிடும் பழக்கம் செரிமானம், எடை மேலாண்மை மற்றும் நல்ல தூக்கத்திற்கு சிறந்தது என்கிறார்கள் நிபுணர்கள்.

இரவு உணவை சீக்கிரமே சாப்பிடும் பழக்கமானது தூங்க செல்லும் முன் நம் உடல் உணவை ஜீரணிக்க போதுமான நேரத்தை அளிக்கிறது. உதாரணமாக, நீங்கள் இரவு 10 மணிக்கு தூங்குபவர் என்றால் இரவு 7 அல்லது 8 மணிக்குள் இரவு உணவை சாப்பிட முயற்சி செய்யுங்கள். இது ஆசிட் ரிஃப்ளக்ஸ் மற்றும் நெஞ்செரிச்சல் போன்ற பிரச்சனைகளைத் தடுக்க உதவுகிறது.

இரவு உனவை தாமதமாக சாப்பிடுவது சர்க்காடியன் ரிதம் என்று குறிப்பிடப்படும் நம் உடலின் இயற்கையான கடிகாரத்தை (natural clock) சீர்குலைக்கும். நீங்கள் இரவில் தாமதமாக சாப்பிடும்போது, ​​உங்கள் உடல் சுறுசுறுப்பாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறது, இது நீங்கள் தூங்குவதற்கு தடையாக இருக்கும் மற்றும் உங்கள் உடல் கலோரிகளை செயலாக்கும் திறனையும் பாதிக்கும். அதே நேரம் இரவு உணவை சீக்கிரம் சாப்பிடுவது வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்த, இன்சுலின்ரெசிடென்ஸ் மற்றும் நீரிழிவு அபாயத்தை குறைக்கவும் உதவுவதாக ஆய்வுகள் கூறுகின்றன.

பெரும்பாலானோர் இந்த நேரத்தில் வேலையில் இருப்பார்கள் அல்லது வேலை முடிந்து வீடு திரும்பி கொண்டிருப்பார்கள். 6 - 7 மணிக்குள் சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு உகந்ததாக இருந்தாலும், பெரும்பாலானவர்களுக்கு நடைமுறைக்கு ஏற்றதாக இருக்காது. இப்படிப்பட்ட சூழலில், உங்கள் இரவு உணவை முடிந்தவரை சீக்கிரம் குறைந்தபட்சம் இரவு 8.30 மணிக்குள் சாப்பிட முயற்சிக்கவும்.

நீங்கள் தான் வீட்டு சமையலை கவனித்து கொள்பவர் என்றால் இரவு உணவிற்கு தேவையான ஏற்பாடுகளில் சிலவற்றை காலையிலேயே தயாராக வைத்துவிட்டு சென்றால், மாலை நேர உணவு தயாரிப்பில் சிரமம் இருக்காது. இல்லை என்றால் ஆரோக்கியமான உணவை தேர்வு செய்து இரவு வீட்டிற்கு செல்லும் முன்பே சாப்பிடலாம். சீக்கிரம் சாப்பிடுவதால் இரவில் பசி ஏற்பட்டால் நீங்கள் ஒரு கிளாஸ் சூடான பால் அல்லது சிறிது கிரீன் டீ குடிக்கலாம்.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்