மீண்டும் சூர்யாவுடன் இணையும் கீர்த்தி சுரேஷ்…?

25 சித்திரை 2025 வெள்ளி 14:19 | பார்வைகள் : 241
தென்னிந்திய திரை உலகில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் நடிகை கீர்த்தி சுரேஷ். இவர் திருமணத்திற்கு முன்பு பேபி ஜான் திரைப்படத்தில் நடித்திருந்தார். அடுத்தது கண்ணி வெடி, ரிவால்வர் ரீட்டா ஆகிய படங்களை கைவசம் வைத்திருக்கிறார். இது தவிர இவர், அசோக்செல்வனுடன் இணைந்து புதிய படம் ஒன்றில் நடிக்க போவதாகவும் சொல்லப்படுகிறது.
இந்நிலையில் கீர்த்தி சுரேஷ் குறித்த கூடுதல் தகவல் என்னவென்றால், இவர் தானா சேர்ந்த கூட்டம் படத்திற்கு பிறகு சூர்யாவுடன் மீண்டும் இணைந்து நடிக்க உள்ளாராம். அதாவது வெங்கி அட்லூரி இயக்கத்தில் உருவாகும் சூர்யா 46 படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகியுள்ளாராம்
ஏற்கனவே சூர்யா 46 படத்தில் நடிகை மமிதா பைஜூ கதாநாயகியாக நடிக்கப் போகிறார் என பல தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில், கீர்த்தி சுரேஷும் இப்படத்தில் இணைய உள்ள தகவல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் சூர்யா 46 படத்தை சித்தாரா என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்க போவதாகவும், ஜி.வி. பிரகாஷ் இந்த படத்திற்கு இசையமைக்க போவதாகவும் சொல்லப்படுகிறது. இது தவிர இந்த படத்தின் படப்பிடிப்பை மே 15 இல் தொடங்கி விரைவில் முடிக்க படக்குழு திட்டமிட்டு வருவதாகவும் பல தகவல்கள் சமூக வலைதளங்களில் பரவி வருவது குறிப்பிடத்தக்கது.