Paristamil Navigation Paristamil advert login

அட்லி - அல்லு அர்ஜுன் படத்தில் இந்த 3 கதாநாயகிகளா?

அட்லி - அல்லு அர்ஜுன் படத்தில் இந்த 3 கதாநாயகிகளா?

25 சித்திரை 2025 வெள்ளி 14:08 | பார்வைகள் : 134


அட்லி இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிக்கும் படத்தின் அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரமாண்டமாக தயாரிக்கும் இந்த படத்தின் கிராபிக்ஸ் காட்சிகள் அமெரிக்காவில் உள்ள பிரம்மாண்டமான ஏஐ ஸ்டூடியோவில் தயாராகி வருகிறது என்பதை இந்த படத்தின் முன்னோட்ட வீடியோவில் இருந்து பார்த்தோம்.

இந்த நிலையில், அடுத்த கட்டமாக இந்த படத்தில் மூன்று நாயகிகள் நடிக்க இருப்பதாக ஏற்கனவே செய்திகள் வெளியான நிலையில் அது குறித்த தகவல்களும் அவ்வப்போது கசிந்து வந்தது. இந்த நிலையில் தற்போது வந்துள்ள தகவலின்படி இந்த படத்தில் தீபிகா படுகோனே, ஜான்வி கபூர் மற்றும் மிருணாள் தாக்குர் ஆகியோர் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த மூன்று நாயகிகள் இடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும், இவர்கள் மூவர் மட்டும் இந்த படத்தில் உறுதி செய்யப்பட்டால், ஹீரோயின்களுக்காக ஒரு பெரிய பட்ஜெட் ஒதுக்க வேண்டியது நிலை இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

இந்தியாவின் நம்பர் ஒன் சம்பளம் வாங்கும் நடிகைகளின் பட்டியலில் தீபிகா படுகோனே இருக்கும் நிலையில் ஜான்வி கபூர் மற்றும் மிருணாள் தாக்கூர் ஆகிய இருவருமே அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்