சூர்யா விஜய் சேதுபதியின் முதல் படம் ரசிகர்களை கவருமா?

25 சித்திரை 2025 வெள்ளி 14:26 | பார்வைகள் : 133
விஜய் சேதுபதியின் மகன் சூர்யா “பீனிக்ஸ் வீழான்' ” என்ற திரைப்படத்தில் நாயகனாக அறிமுகமான நிலையில், அந்த படத்தின் ரிலீஸ் தேதி சற்று முன் புதிய போஸ்டருடன் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் திரையுலகில் பிரபல நடிகர்களின் வாரிசுகள் திரையுலகில் ஜொலித்து வரும் நிலையில், விஜய் சேதுபதி மகன் சில படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார்.
தற்போது “பீனிக்ஸ் வீழான்' ” என்ற படத்தில் நாயகனாக நடித்து வருகிறார். பிரபல ஸ்டண்ட் மாஸ்டர் அனல் அரசு இயக்கத்தில் உருவாகி உள்ள இந்த படத்திற்கு சாம் சி.எஸ் இசையும் வேல்ராஜ் ஒளிப்பதிவும், பிரவீன் படத்தொகுப்பு பணியும் செய்துள்ளனர்.
இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்த நிலையில், விரைவில் இந்த படத்தின் ப்ரமோஷன் பணிகளும் தொடங்க இருப்பதாக கூறப்பட்டது.
இந்த நிலையில், சற்றுமுன் இந்த படத்தின் ரிலீஸ் தேதி ஜூலை நான்காம் தேதி என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரிலீஸ் செய்தியுடன் கூடிய புதிய போஸ்டர் வெளியாகி உள்ள நிலையில், அந்த போஸ்டர் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
சூர்யா விஜய் சேதுபதி உடன் வரலட்சுமி, முத்துக்குமார், சம்பத்ராஜ், ஹரிஷ் உத்தமன், அபி நட்சத்திரா உள்பட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர்.