பார்தெல்லா வத்திக்கான் செல்கின்றார்!! கட்சி பிளவுபடுமா?

25 சித்திரை 2025 வெள்ளி 11:11 | பார்வைகள் : 1069
தேசிய முன்னணிக் கட்சியான RN (Rassemblement national) கட்சியின் தலைவர் ஜோர்தான் பார்தெல்லா இன்று மாலை வத்திக்கான் சென்று போப்பாண்டவர் பிரோன்சுவாவின், நாளைய இறுதிநிகழ்வில் கலந்துகொள்ள உள்ளார்.
மரின் லூப்பன் தண்டனைக்கு உள்ளாமையால் அவரின் வழிகாட்டலில் பார்தெல்லா வத்திக்கான் செல்கின்றார்.
இந்த அறிவிப்பைத் தொடர்ந்து கட்சியின் அடுத்த நிலை உதவித் தலைவர் ஒருவர் மிகக் காட்டமாக இதை எதிர்த்துள்ளார்.
«பார்தெல்லா வத்திக்கான் செல்வதென்பது முரண்பாடான செயலாக உள்னது. அவர் ஒரு நாத்திகர். ஞானஸ்தானம் கூடப் பெற்றிருக்கவில்லை. இவர் செய்வது நேர்மையான செயல் அல்ல»
«இவர் எப்படி யாருடன் வத்திக்கான் செல்லப் போகின்றார். இது ஒரு பொய்யான செயல். அத்துடன் எமது கட்சியின் வாக்களார்கள் ஒன்றும் போப்பாண்டவரின் விசுவாசிகள் அல்ல»
எனக் கட்சிக்குள்ளேயே பார்தெல்லாவிற்கு எதிரான் விமர்சனங்கள் எழுந்துள்ளன.