முப்படைகளுக்கும் உத்தரவிட்ட பாகிஸ்தான்

25 சித்திரை 2025 வெள்ளி 10:14 | பார்வைகள் : 465
சிம்லா ஒப்பந்தத்தை நிறுத்தி வைத்ததைத் தொடர்ந்து பாகிஸ்தான் தனது ராணுவத்தினரை எச்சரிக்கையுடன் இருக்க உத்தரவிட்டுள்ளது.
காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதல் நடந்ததையடுத்து 'சிம்லா அமைதி ஒப்பந்தம்' ரத்து செய்யப்படுவதாக பாகிஸ்தான் அறிவித்தது.
இது 1972ஆம் ஆண்டில் இந்தியா, பாகிஸ்தான் இடையே போர்நிறுத்த ஒப்பந்தமாக போடப்பட்டது.
மேலும், இந்தியாவுடனான அனைத்து ஒப்பந்தங்களையும் நிறுத்தி வைப்பதாகவும் அறிவித்த பாகிஸ்தான், தங்கள் நாட்டின் படைகளை எச்சரிக்கையுடன் இருக்க உத்தரவிட்டுள்ளது.
முப்படைகளுக்கு பறந்த இந்த உத்தரவில், இந்தியா தாக்குதல் நடத்தினால் எதிர்கொள்ள தயாராக இருக்குமாறும் கூறப்பட்டுள்ளது.