பிரித்தானிய அரச குடும்பத்தை உலுக்கும் ஒரு சம்பவம்... வாழும் நாஸ்ட்ராடாமஸ் எச்சரிக்கை

25 சித்திரை 2025 வெள்ளி 10:09 | பார்வைகள் : 111
உலக அளவில் டசின் கணக்கான சம்பவங்களை முன்கூட்டியே கணித்துள்ள பிரேசில் நாட்டவரான வாழும் நாஸ்ட்ராடாமஸ் என்பவர் பிரித்தானிய அரச குடும்பத்து உறுப்பினர் ஒருவர் தொடர்பில் கடும் எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.
பிரித்தானிய அரச குடும்பத்தை மொத்தமாக உலுக்கும் ஆரோக்கியம் தொடர்பான சம்பவம் ஒன்று மிக விரைவில் நிகழலாம் என்றே Athos Salomé என்ற வாழும் நாஸ்ட்ராடாமஸ் கணித்துள்ளார்.
38 வயதான வாழும் நாஸ்ட்ராடாமஸ் கடந்த பல ஆண்டுகளாக பல்வேறு சம்பவங்களை கணித்துள்ளார்.
கொரோனா பெருந்தொற்று, இரண்டாம் எலிசபெத் ராணியாரின் மறைவு உட்பட பல சம்பவங்கள் அவர் கணிப்பில் நடந்தேறியுள்ளது.
தற்போது பிரித்தானிய அரச குடும்பம் தொடர்பில் அதிரவைக்கும் கணிப்பு ஒன்றை பகிர்ந்துள்ளார்.
இந்த ஆண்டு இறுதிக்குள் அல்லது 2026 தொடக்கத்தில் பிரித்தானிய அரச குடும்பத்து முதன்மையான உறுப்பினர் ஒருவர் உடல் நலம் குன்றி அவதிக்கு உள்ளாவார் என்றே வாழும் நாஸ்ட்ராடாமஸ் கணித்துள்ளார்.
இதன் காரணமாக மன்னர் சார்லஸ் மற்றும் இளவரசி யூஜெனியுடன் ஒரு பலவீனமான ஒப்பந்தம் ஒன்று ஏற்படும் எனவும், இதன் ஒருபகுதியாக இளவரசர் ஹரி பிரித்தானியா திரும்பும் வாய்ப்பும் உருவாகும் என அவர் கணித்துள்ளார்.
இருப்பினும், இளவரசர் ஹரி மற்றும் அரச குடும்ப உறுப்பினர்களிடையேயான உரசல் நீடிக்கும் என்றும் வேல்ஸ் இளவரசர் வில்லியம் தமது சகோதரரை ஏற்றுக்கொள்வது கடினம் என்றும் வாழும் நாஸ்ட்ராடாமஸ் கணித்துள்ளார்.
ஆனால் சகோதரர்கள் இடையே உள்ள இடைவெளியை அவர்களின் பிள்ளைகள் காலப்போக்கில் சரி செய்வார்கள் என்றே வாழும் நாஸ்ட்ராடாமஸ் கணித்துள்ளார்.