Paristamil Navigation Paristamil advert login

டி20யில் புதிய மைல்கல்லை எட்டும் தோனி

டி20யில் புதிய மைல்கல்லை எட்டும் தோனி

25 சித்திரை 2025 வெள்ளி 09:36 | பார்வைகள் : 128


சென்னை சூப்பர் கிங்ஸ் அணித்தலைவர் எம்.எஸ்.தோனி டி20யில் தனது 400வது போட்டியில் களமிறங்குகிறார்.

ஐபிஎல் 2025 தொடரின் இன்றைய லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதுகின்றன.

இந்தப் போட்டி எம்.எஸ்.தோனிக்கு (M.S.Dhoni) 400வது டி20 போட்டியாகும். இதன்மூலம் இந்த மைல்கல்லை எட்டும் 4வது இந்திய வீரர் எனும் பெருமையை அவர் பெறுகிறார்.

எனினும் ஐபிஎல் தொடரில் அதிக போட்டிகளில் விளையாடியவர்கள் பட்டியலில் தோனி 272 போட்டிகளுடன் முதலிடத்தில் உள்ளார்.

இதுமட்டுமின்றி பல சாதனைகளை அவர் தன்னகத்தே வைத்துள்ளார். டி20 வரலாற்றில் அதிக வெற்றிகளைப் பெற்ற (190) கேப்டன் தோனிதான்.

அதேபோல், விக்கெட் கீப்பராகவும் மிரட்டும் தோனி 310 டிஸ்மிஸ்களை டி20யில் செய்துள்ளார். ஐபிஎல் தொடரில் 24 அரைசதங்களுடன் 5377 ஓட்டங்கள் குவித்துள்ளார்.

அதிக டி20 போட்டிகளில் விளையாடிய வீரர்கள்
•    கிரான் பொல்லார்ட் - 695 போட்டிகள்
•    டிஜே பிராவோ - 582 போட்டிகள்
•    சோயிப் மாலிக் - 557 போட்டிகள்
•    ஆந்த்ரே ரஸல் - 546 போட்டிகள்
•    சுனில் நரைன் - 543 போட்டிகள்    

 

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்