Paristamil Navigation Paristamil advert login

வெளிநாடொன்றில் இலங்கை தம்பதி கடத்தல் – ஜனாதிபதி அநுரவின் பணிப்பில் பத்திரமாக மீட்பு!

வெளிநாடொன்றில்  இலங்கை தம்பதி கடத்தல் – ஜனாதிபதி அநுரவின் பணிப்பில் பத்திரமாக மீட்பு!

25 சித்திரை 2025 வெள்ளி 09:34 | பார்வைகள் : 293


பங்களாதேஷூக்கு சுற்றுலா சென்றிருந்த இலங்கையின் பிரபல தொழிலதிபரான ஆனந்த பத்திரன மற்றும் அவரது மனைவி ப்ரின்சி பத்திர ஆகியோர் கடந்த 23ஆம் திகதி பணம் பறிக்கும் கும்பல் ஒன்றினால் கடத்தப்பட்டுள்ளனர்.

எவ்வாறாயினும், குறித்த இருவரும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவில் அறிவுத்தலின் பேரில் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த இருவரும் கடந்த 23 ஆம் திகதி பங்களாதேஷூக்கு சுற்றுலா சென்றிருந்தபோது, ​​மிரட்டி பணம் பறிக்கும் கும்பல் ஒன்றால் கடத்தப்பட்டனர்.

அவர்களை விடுவிக்க 20 மில்லியன் டொலர்கள் தேவை என்று அந்த கும்பல் கூறியுள்ளது.
இது குறித்து பங்களாதேஷில் உள்ள இலங்கை உயர் ஸ்தானிகராலயம் இலங்கை அரசாங்கத்திற்குத் தெரிவித்ததாகவும், அவர்கள் உடனடியாக குறித்த இருவரையும் மீட்க நடவடிக்கை எடுத்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் அறிவுறுத்தல்களின் பேரில் உடனடியாகச் செயல்பட்டு, பாதுகாப்புச் செயலாளர், அரச புலனாய்வுத் தலைவர், வெளியுறவு அமைச்சின் செயலாளர் மற்றும் பங்களாதேஷுக்கான இலங்கை உயர் ஸ்தானிகர் ஆகியோர் இணைந்து தம்பதியினரை மீட்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுத்தனர்.

இதனையடுத்து பங்களாதேஷ் பொலிஸாரின் உதவியுடன் தம்பதியினர் மீட்கப்பட்டு தற்போது அந்நாட்டு பொலிஸாரின் பாதுகாப்பில் இருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில், குறித்த இருவரையும் இலங்கைக்கு அழைத்து வருவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல்கள் தெரிவிக்கின்றன.
 

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்