Paristamil Navigation Paristamil advert login

விளாடிமிர் புடின் மீது கடும் கோபத்தில் டொனால்ட் ட்ரம்ப்

விளாடிமிர் புடின் மீது கடும் கோபத்தில் டொனால்ட் ட்ரம்ப்

25 சித்திரை 2025 வெள்ளி 08:59 | பார்வைகள் : 204


  உக்ரைனில் ரஷ்யா நடத்திய தாக்குதல் மிகவும் மோசமானது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கண்டனம் வெளியிட்டுள்ளார்.

இதனால், தான் அதிருப்தி அடைந்ததாகவும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

  ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினிடம் தொலைபேசியில் உரையாடிய ட்ரம்ப்,

  'விளாடிமிர்  நிறுத்து, வாரத்திற்கு 5,000 இராணுவ வீரர்கள் உயிரிழக்கின்றார்கள். போர்நிறுத்த ஒப்பந்தத்தை செய்துகொள்வோம்' என கூறியதாகவும் சமூக ஊடகங்கள் கூறுகின்றன.

இந்நிலையில், கீவில் நடந்த ரஷ்யாவின் தாக்குதலில் குறைந்தது 12 பேர் வரை கொல்லப்பட்டதாக உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். போர்நிறுத்தத்தை அடைய ரஷ்யா மீது அதிக அழுத்தம் பிரயோகிக்கப்பட வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, நேற்று (23) அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி போர்நிறுத்த பேச்சுவார்த்தையை குழப்புவதாக கூறியிருந்தார்.

ரஷ்யா கையகப்படுத்திய கிரிமியாவை உக்ரைன் ஒருபோதும் அங்கீகரிக்காது என்று ஜெலன்ஸ்கி தெரிவித்த கருத்துக்கு இணங்கவே ட்ரம்ப் இவ்வாறு விமர்சித்திருந்தார்.

இந்நிலையில்  ரஷ்யாவின் மோசமான தாக்குதலால் , உக்ரைனில் நிலைமை மோசமாகலாம் என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

 

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்