Paristamil Navigation Paristamil advert login

மறைவுக்குப் பின்னர் பிரெஞ்சு மக்களிடம் பிரபலமான போப்பாண்டவர்!!

மறைவுக்குப் பின்னர் பிரெஞ்சு மக்களிடம் பிரபலமான போப்பாண்டவர்!!

25 சித்திரை 2025 வெள்ளி 08:37 | பார்வைகள் : 668


போப்பாண்டவர் பிரான்சிஸ் அவரது மறைவின் பின்னர் பிரெஞ்சு மக்களிடம் அதிகளவில் தெரியவந்துள்ளதாக கருத்துக்கணிப்பு ஒன்றில் தெரியவந்துள்ளது.

பிரான்சில் வசிக்கும் பத்தில் கிட்டத்தட்ட ஒன்பது பேர் (அல்லது 86% சதவீதமானவர்கள்) பிரான்சிஸ் ஒரு சிறந்த போப்பாண்டவர் என கருத்து தெரிவித்துள்ளனர். அதேவேளை, அவர் உயிருடன் இருக்குக்கும் போது அவரை தெரிந்துகொண்டதவை விட, அவரது மறைவின் பின்னரே அவர் குறித்து அதிகமான தகவல்களும், அதிகமான மக்களுக்கும் அவரை தெரியவந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


கத்தோலிக்கர்களில் 90.8% சதவீதமானவர்களும், பிற மதங்கள் சார்ந்தோர்களில் 79.9% சதவீதமானவர்களும், மத கொள்கைகள் இல்லாதவர்களில் 81.8% சதவீதமானவர்களும் போப் பிரான்சிஸ் ஒரு சிறந்த போப்பாண்டவர் என தெரிவித்துள்ளனர்.

Odoxa-Backbone நிறுவனம் மேற்கொண்டிருந்த இந்த கருத்துக்கணிப்பின் முடிவு இன்று வெள்ளிக்கிழமை வெளியாகியிருந்தது.

அதேவேளை, புதிய போப்பாண்டவர் எந்த நாட்டைச் சேர்ந்தவராக இருந்தாலும் பரவாயில்லை என பிரெஞ்சு மக்களில் 69% சதவீதமானவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்