நோந்தில் கத்திக் குத்து - யார் இந்தக் குற்றவாளி - விபரங்கள்

25 சித்திரை 2025 வெள்ளி 08:21 | பார்வைகள் : 1071
நேற்று வியாழக்கிழமை 12h30 அளவில் நோந்தில் (Nantes -Loire-Atlantique) உள்ள தனியார் லிசேயான Notre-Dame-de-Toutes-Aides இல் ஒரு மாணவன் கத்தியால தனது சக மாணவர்கள் நான்கு பேரைக் கத்தியால் குத்தியுள்ளான். அதில் ஒரு மாணவன் சாவடைந்துள்ளான்.
ஜுஸ்தன் (Justin P) எனப்படும் இந்தகத்திக்குத்துக் குற்றவாளி கைது செய்யப்பட்டு வைத்தியசாலையில் அனுமதித்திருந்தபோது, சக மாணவர்கள் தன்னை மன உளைச்சலிற்கு ஆளாக்கி உள்ளதாகத் தெரிவித்துள்ளான்.
மிகவும் மோசமான குணாதிசயங்களை இந்த இளைஞன் கொண்டிருந்தமையால், முதவில் மனநல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளான்.
இந்தச் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்மதியதால் உடனடியாக 19h00 மணியளவில் சம்பவ இடத்திற்கு கல்வி அமைச்சர் எலிசபெத் போர்ன் வந்திருந்தார்.
ஜுஸ்தன் எனும் இந்த மாணவன் பெரும் மன அழுத்ததிற்கு உள்ளானவர் என்றும் கிட்லரைப் போற்றிக் கதைப்பவன் என்றும் சன மாணவர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாசித்தத்துவங்கள், தீவிர வலதுசாரிப் பேச்சுக்களோடு, 11 செப்டெம்பர் தாக்குதல் போல் ஒன்றைத் தான் செய்யப்போவதாகக் கூறியமை, தங்களைப் பெரிதும் அச்சத்திற்கு உள்ளாக்கியுள்ளது எனவும் சக மாணவர்கள் சாட்சியமளித்துள்ளனர்.