Paristamil Navigation Paristamil advert login

கண்டி தலதா மாளிகையில் வழிபாட்டிற்குச் சென்ற 4 பேர் மரணம்; 420 பேர் மருத்துவமனையில்

கண்டி தலதா மாளிகையில் வழிபாட்டிற்குச் சென்ற 4 பேர் மரணம்; 420 பேர் மருத்துவமனையில்

25 சித்திரை 2025 வெள்ளி 07:08 | பார்வைகள் : 242


கண்டி ஸ்ரீ தலதா வழிபாட்டிற்குச் சென்ற நால்வர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மூன்று பேர் மாரடைப்பால் உயிரிழந்துள்ளதாகவும், மற்றுமொரு பெண்மணி முச்சக்கரவண்டியொன்று மோதியதில் உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

உயிரிழந்தவர்கள் குளியாப்பிட்டிய, பண்டாரகம, கலிகமுவ மற்றும் குருநாகல் பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் ஆவர்.

அம்பிட்டிய பகுதியில் வரிசையில் நின்றிருந்த பெண்ணொருவரும் ஆணொருவரும், கட்டுக்கஸ்தோட்டை நகருக்கு அருகில் வரிசையில் நின்றிருந்த பெண்ணொருவரும் உயிரிழந்துள்ளனர்.

இதற்கிடையில், கண்டி போதனா வைத்தியசாலையில், கடந்த சில தினங்களில் சுகவீனமுற்ற 420 யாத்திரிகர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், மேலும் பலருக்கு சிகிச்சையளிக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் , ஸ்ரீ தலதா மாளிகையில் புனித பல் சின்னத்தை காண சென்ற பௌத்த பக்தர்கள் குழு உள்ளூர் முஸ்லிம் மசூதிக்குள் ஓய்வெடுக்கும் புகைப்படங்களும் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்