பாகிஸ்தானுக்கு பதிலடி; இந்தியாவுக்கான வாய்ப்புகள் என்ன?

25 சித்திரை 2025 வெள்ளி 14:01 | பார்வைகள் : 285
காஷ்மீரில் சுற்றுலா பயணிகள் மீது பாகிஸ்தான் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து, இந்தியா பதில் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. எத்தகைய வழிகளில் பாகிஸ்தானை தண்டிக்க முடியும் என மத்திய அரசு ஆராய்ந்து அதன்படி நடவடிக்கை எடுத்து வருகிறது.
ஏப். 2016ம் ஆண்டு செப்., 18ம் தேதி அதிகாலை, ஜம்மு - காஷ்மீரின் உரி பகுதிக்குள் ஊடுருவிய நான்கு பயங்கரவாதிகள், நம் ராணுவ தலைமையகம் மீது மூன்று
நிமிடங்களில், 17 கையெறி குண்டுகளை சரமாரியாக வீசினர்.
இதில், 17 ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். ஆறு மணி நேரம் நீடித்த துப்பாக்கி சண்டையில், பயங்கரவாதிகள் நான்கு பேரும் சுட்டுக் கொல்லப்பட்டனர். 11 நாட்கள் காத்திருந்த நம் ராணுவம், பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீருக்குள் நுழைந்து பயங்கர வாதிகளின் இருப்பிடத்தில் நடத்திய அதிரடி தாக்குதலில், 15 பாக்., பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.
இதைத் தொடர்ந்து, 2019ம் ஆண்டு, பிப்., 14ல், ஜம்மு - காஷ்மீரின் புல்வாமாவில், நம் மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் வந்த கான்வாய் மீது பாக்., பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலைப் படை தாக்குதலில், நம் வீரர்கள், 40 பேர் வீரமரணம் அடைந்தனர்.
இதற்கு பதிலடியாக, பிப்., 26ல், பாகிஸ்தானின் பாலகோட் பகுதிக்குள் பறந்து சென்ற நம் 12 போர் விமானங்கள், ஜெய்ஷ்-இ -முக மது பயங்கரவாதிகளின் பயிற்சி
இந்த இரு சம்பவங்களிலுமே, நம் ராணுவத்தினரை குறிவைத்துதான் பயங்கரவாத தாக்குதல் நடந்தன.
இந்த முறை, அப்பாவி சுற்றுலா பயணியர் கொல்லப்பட்டு இருப்பது நம் ராணுவத்துக்கு மட்டுமின்றி, பொதுமக்கள் மத்தியிலும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.
எனவே, இந்த முறை நம் பதிலடி மிகக் கடுமையானதாக இருக்கும் என்றே எதிர்பார்க்கப் படுகிறது. பாகிஸ்தானில் இருந்து செயல்படும் லஷ்கர்-இ-தொய்பா உள்ளிட்ட பயங்கரவாத அமைப்புகளின் தலைமையகம் மற்றும் அதன் முக்கிய தலைவர்களை குறிவைத்து அழிக்கவும் பேச்சு நடந்து வருவதாகக் கூறப்படுகிறது.
குறிப்பாக, பாக்.,கின் பஹவல்பூரில் உள்ள லஷ்கர் தலைமைய கத்தை தகர்க்க முதலில் திட்டமிட்ட தாகவும், அது பொதுமக்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என் பதால், அத்திட்டம் கைவிடப்பட்ட தாகவும் கூறப்படுகிறது. பயங்கரவாத ஏவுதளங்கள், பயிற்சி தளங்கள் மற்றும் எல்லை யில் இருந்து செயல்படும் தலைமையை குறிவைத்து நம் முப்படைகள் ஒருங்கிணைந்த தாக்குதல் நடத்தும் திட்டமும் பரிசீலனையில் உள்ளதாக தெரிகிறது.