CAF: இம்மாதம் சுமார் 1,20,000 குடும்பங்களின் வீட்டு உதவிகள் (aides logement) தடைப்பட்டுள்ளது!
25 சித்திரை 2025 வெள்ளி 06:46 | பார்வைகள் : 5681
இம்மாதம் நிர்வாக பிழையால் சுமார் 1,20,000 குடும்பங்கள் கடுமையான நிதி நெருக்கடியை எதிர்கொள்கின்றன. வாடகை ஒப்பந்தங்களில் தேதிகளைப் பற்றிய பிழை காரணமாக, Caisse d'Allocations Familiales (CAF) வழங்கும் வீட்டு உதவிகளை பெற முடியாமல் இருக்கின்றது.
இந்த நிர்வாக பிழையால் பல குடும்பங்கள் தங்களது வீட்டு வாடகையை செலுத்த முடியாமல் மிகுந்த பொருளாதார சிக்கலில் உள்ளன.
CAF இந்த பிழையை ஏற்றுக்கொண்டு, ஒரு அவசர குழு அமைத்து தவறான ஒப்பந்த தேதிகளை சரிசெய்யும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது. பிழைதிருத்தம் செய்து, வீட்டு உதவிகளை விரைவில் மீண்டும் வழங்குவதற்கான முயற்சிகள் நடந்து வருகின்றன.
இந்த நிர்வாக பிழையால் பல குடும்பங்கள் தங்களது அவசர சேமிப்புகளை பயன்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. சிலர் தங்கள் வீட்டுஉரிமையாளர்களிடம் கால அவகாசம் கேட்க நேரிட்டுள்ளது, சிலருக்கு வீட்டைவிட்டு வெளியேற்றப்படும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.
சில உள்ளூர் அமைப்புகள் மற்றும் நகரசபை, பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தற்காலிக நிதியுதவிகள் மற்றும் வழிகாட்டுதல்களை வழங்கி வருகின்றன.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
7 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1
19 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
சதீஸ்குமார் அபிசன்
Mitry-Mory, பண்டதாரிப்பு
வயது : 21
இறப்பு : 07 Dec 2025
-
4






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்
















Ajouter
Annuaire
Scan