Paristamil Navigation Paristamil advert login

போப்பாண்டவரிற்கு எதிராக மெலோன்சோன் கட்சி!!

போப்பாண்டவரிற்கு எதிராக மெலோன்சோன் கட்சி!!

24 சித்திரை 2025 வியாழன் 13:52 | பார்வைகள் : 1692


ஜோன்-லுக் மெலோன்சோனின் கட்சியான LFI (La France insoumise) கட்சியினர், போப்பாண்டவரிற்கான பிரெஞ்சு அரச மரியாதையை மிகக் கடுமையாக எதிர்த்துள்ளனர்.

«ஒரு தேவாலயத்தின் தலைவரிற்காக அரச மரியாதையை வழங்குவதும், தேசியக் கொடியை அரைக்கம்பத்தில் விடுவதும் முயைற்றது. அது பெரும் அரச தவறு»

என LFI கட்சியின் பாராளுமன்றத் தலைவி மத்தில்ட் பனோ (Mathilde Panot) தெரிவித்துள்ளார்.

«பிரான்ன்ஸ் அரசாங்கம் பெரிதும் தவறிழைக்கின்றது. மக்ரோன் இறுதி அஞ்சலிக்காக வத்திக்கான் செல்வது எனக்கு அதிர்ச்சி அளிக்கவில்லை. ஏனென்றால் எமானுவல் மக்ரோனின் செயல்கள் இப்படித்தான் முறையற்தாகவே இருக்கும்»

எனவும் மத்தில்ட் பனோ விமர்சித்துள்ளார்.
 

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்