தொலைபேசிகள் பறிக்கப்படும்... நீதித்துறை அமைச்சர் அதிரடி!!
24 சித்திரை 2025 வியாழன் 08:10 | பார்வைகள் : 9526
போதைப்பொருள் கடத்தல், விற்பனை, வாடிக்கையாளர்கள் கைது செய்யப்படுபோது அவர்களுக்கு தண்டனை வழங்கப்படுவதுடன், அவர்களது தொலைபேசிகளும் பறிக்கப்பட்டு அழிக்கப்படும் என நீதித்துறை அமைச்சர் Gérald Darmanin அறிவித்துள்ளார்.
ஏப்ரல் 24, இன்று வியாழக்கிழமை காலை ஊடகம் ஒன்றுக்கு அவர் வழங்கிய செவ்வியில் இதனைத்தெரிவித்துள்ளார்.
“"போதைப்பொருள் பயன்படுத்துபவர்களும் விற்பனையாளர்களும் பிடிபட்டால், நிர்ணயிக்கப்பட்ட அபராதத்தை செலுத்துவது மட்டுமல்லாமல், அவர்களின் தொலைபேசிகளையும் பறிமுதல் செய்ய வேண்டும் என்பதற்கான ஒரு அறிவுறுத்தலை, பிரான்சில் உள்ள அனைத்து அரசு வழக்கறிஞர்களுக்கும் இன்று பிற்பகல் ஒரு சுற்றறிக்கையை வெளியிடுவேன்," என அவர் தெரிவித்தார்.
டெலிகிராம், வாட்ஸாப், சிக்னல் உள்ளிட்ட செயலிகள் மூலம் ரகசியமாக இந்த போதைப்பொருள் விற்பனை இடம்பெற்று வருகிறது. அவர்களது தொலைபேசிகள் நிரந்தரமாக அழிக்கப்படும் எனவும், புதிய தொலைபேசி இலக்கங்கள் பெற்றுக்கொள்வதிலும் சிக்கல் ஏற்படுத்தப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
10 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
சதீஸ்குமார் அபிசன்
Mitry-Mory, பண்டதாரிப்பு
வயது : 21
இறப்பு : 07 Dec 2025
-
4






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்

















Ajouter
Annuaire
Scan