◉ எரிவாயு கட்டணம் வீழ்ச்சியடைகிறது!!

24 சித்திரை 2025 வியாழன் 07:00 | பார்வைகள் : 3121
எரிவாயு கட்டணம் வரும் மே 1 ஆம் திகதியுடன் குறைவடைவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு கிலோவாட் மணிநேரத்துக்கான (kWh) கட்டணம் சராசரியாக 6.4% சதவீதத்தால் குறைவடைகிறது. ஏப்ரல் மாதத்தில் €0.12412 யூரோக்களாக இருந்த கட்டணம் மே மாதம் 1 ஆம் திகதி முதல் €0.1162 யூரோக்களாக குறைவடைகிறது.
வெப்பமூட்டிக்காக எரிவாயு பயன்படுத்துபவர்கள் (வருடத்துக்கு 11,200 kWh எரிவாயு பயன்படுத்துபவர்கள்) ஆண்டுக்கு €1,667 யூரோக்களில் €1,579 யூரோக்களாக குறைவடைந்து, , €88 யூரோக்களை சேமிக்க முடியும் என தெரிவிக்கப்படுகிறது.
சமையலுக்காக மட்டும் எரிவாயு பயன்படுத்துபவர்களுக்கு 5.16% சதவீதத்தால் கட்டணம் குறைவடையும் என தெரிவிக்கப்படுகிறது.
4 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. வீரவாகு முகுந்தன்
Bremen (Germany), கரவெட்டி
வயது : 53
இறப்பு : 29 Jul 2025