உலகின் மிக நீளமான ‘ஸ்ரோபெரி கேக்’ தயாரித்து சாதனை!!
23 சித்திரை 2025 புதன் 17:19 | பார்வைகள் : 6296
Argenteuil (Val-d'Oise) நகரில் உள்ள வெதுப்பகம் ஒன்று உலகின் மிக நீளமான கேக் ஒன்றை தயாரித்து சாதனை படைத்துள்ளது.
121 மீற்றர் நீளமுடைய ஸ்ரோபெர்ரி (fraisier) கேக் ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த கேக்கினை தயாரிக்க 350 கிலோ ஸ்ரோபெர்ரி பழங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. 150 கிலோ சீனியும், 415 பேஸ்ட்டி கிரீம் மற்றும் 4,000 முட்டைகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
121.88 கிராம் எடையுள்ள இராட்சத ஸ்ரோபெர்ரி கேக் தயாரிக்கப்பட்டுள்ளனது. இந்த சுவையிலான கேக் ஒன்று இத்தனை பெரிதாக தயாரிக்கப்படுவது உலகில் இதுவே முதன்முறை. இதன் மொத்த நீளம் 100.48 மீற்றராகும்.
இந்த கேக்கினை கின்னஸ் அதிகாரிகள் பார்வையிட்டு இந்த சாதனையை ஏற்றுக்கொண்டுள்ளனர். அத்தோடு Argenteuil நகர மக்களும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டு கேக் உண்டு மகிழ்ந்தனர்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan