அரைக்கம்பக் கொடி - பிரான்ஸ் ஒரு நாளும் மதங்களை ஆதரிக்காது - அரச பேச்சாளர்!

23 சித்திரை 2025 புதன் 13:53 | பார்வைகள் : 7005
பாப்பரசர் பிரோன்சுவாவின் மறைவிற்கு, பிரான்சில் உள்ள அரச கட்டங்களில் பிரெஞ்சுக் கொடி அரைக்கம்பத்தில் பறக்க விடுவது பற்றி, பல்வேறு கருத்துக்கள், விவாதங்கள் எழ ஆரம்பித்துள்ளன.
இதற்கான விளக்கத்தை பிரான்சின் அரசிற்கான பேசவல்லவரும் செய்தித் தொடர்பாளருமான சோபி பிரிமாஸ் (Sophie Primas) வழங்கி உள்ளார்.
«பிரான்ஸ் ஒரு நாளும் மதங்களையோ அல்லது மதத் தலைவர்களையோ ஆதரிக்காது»
«ஆனால் பாப்பரசர் பிரோன்சுவா, வெறும் மதத்தலைவர் அல்லாது, வத்திக்கான் நாட்டின் அரச தலைவருமாவார். ஒரு அரச தலைவரின் மறைவிற்கு தேசியக்கொடி அரைக்கம்பத்தில் பறப்பது தவறல்ல»
«பாப்பரசர் பிரோன்சுவா அரசியலிலும் பெரும் ஈடுபாடு உடையவர். உக்ரைன் யுத்தத்தத்தை நிறுத்த இவர் ஆற்றிய பங்கு பெரியது»
«உலகத்தின் பல நாடுகளில் அமைதி ஏற்படப் பாடுபட்டும் உள்ளார்»
«அதனால் அவரிற்கான மரியாதையை தேசிய அளவில் செய்வது மிகப் பொருத்தமானது»
என சோபி பிரிமாஸ் விளக்கி உள்ளார். இந்த விளக்கத்துடள் அனைத்து விவாதங்களிற்கும் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
6 நாள்கள் முன்னர்
நினைவஞ்சலி

RAJADURAI
FRANCE (SARCELLES ), BROWN ROAD KALATDI
வயது : 44
இறப்பு : 14 Aug 2025