Gerblé பிஸ்கட்டுகளில் பிளாஸ்டிக் துண்டுகள் இருப்பதாக சந்தேகம்!

23 சித்திரை 2025 புதன் 13:50 | பார்வைகள் : 1587
ஏப்ரல் 22 செவ்வாய்க்கிழமை முதல் பிரான்ஸ் முழுவதும் "Gerblé" பிஸ்கட்டுகள் திரும்பப் பெறப்பட்டுள்ளன.
இவை குறிப்பாக "goûter 4S saveur pommes" எனும் பிஸ்கட்டிலும் மேலும் மார்ச் 31, 2026 காலாவதியாகும் பிஸ்கட்டிலும் கடினமான பிளாஸ்டிக் மற்றும் வேறு பொருட்கள் இருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது .
இந்தப் பிஸ்கட்டுகளை உட்கொண்ட பிறகு காயம் அல்லது பாதக விளைவுகள் ஏற்படும் அபாயம் இருப்பதால், இந்த பிஸ்கட்டுகளை உட்கொள்ள வேண்டாம் என்றும், விற்பனை நிலையத்திற்கே திருப்பி கொடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.