கத்திக்குத்து தாக்குதலில் ஒருவர் பலி.. - ஆஃப்கான் அகதி கைது!

23 சித்திரை 2025 புதன் 11:36 | பார்வைகள் : 6908
கத்திக்கு தாக்குதலில் நபர் ஒருவர் கொல்லப்பட்டதை அடுத்து, ஆஃப்கானைச் சேர்ந்த அகதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஏப்ரல் 21 ஆம் திகதி திங்கட்கிழமை இரவு இச்சம்பவம் Saint-Omer (Pas-de-Calais) நகரில் இடம்பெற்றுள்ளது. நள்ளிரவுக்கு சற்று முன்பாக காவல்துறையினர் எச்சரிக்கப்பட்டதை அடுத்து, சம்பவ இடத்துக்கு அவர்கள் விரைந்து சென்றனர். அங்கு பல தடவைகள் கத்தியால் குத்தப்பட்டு நபர் ஒருவர் இரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளார்.
சடலத்துக்கு அருகே கத்தி ஒன்று பல துண்டுகளாக முறிக்கப்பட்டு கிடந்துள்ளது. சடலத்தை மீட்டு உடற்கூறு பரிசோதனைகளுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பிப் விசாரணைகளை மேற்கொண்டு வரும் காவல்துறையினர், முதற்கட்டமாக ஆஃப்கான் நாட்டைச் சேர்ந்த அகதி ஒருவரைக் கைது செய்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பில் மற்றுமொரு அகதி தேடப்பட்டு வருகிறார்.
2 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

காசிப்பிள்ளை இராஜலிங்கம்
செவ்ரோன் - பிரான்ஸ:, நயினாதீவு 7ம் வட்டாரம்
வயது : 79
இறப்பு : 28 Aug 2025