வெள்ளம் : 26 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!!

23 சித்திரை 2025 புதன் 07:00 | பார்வைகள் : 522
ஏப்ரல் 23, இன்று புதன்கிழமை நான்காவது நாளாக நாட்டின் பல பகுதிகளில் மழை மற்றும் வெள்ள அனர்த்தம் தொடவதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
மத்திய மேற்கு மாவட்டங்கள் என மொத்தமாக 26 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக Charente, Charente-Maritime, Dordogne மற்றும் Gironde ஆகிய நான்கு மாவட்டங்களுக்கும் செம்மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பிரான்சின் மேற்கு மாவட்டங்களில் கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் தொடர்ச்சியாக பெய்து வரும் மழையினால் அங்கு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
ஆறுகள் மற்றும் குளங்கள் நிரம்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பல வீடுகளுக்குள்ளும் தண்ணீர் புகுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அதேவேளை Ain, Allier, Alpes-Maritimes, Aube, Cher, Côte-d'Or, Eure-et-Loir, Indre, Isère, Jura, Loir-et-Cher, Loire, Loiret, Moselle, Nièvre, Bas-Rhin, Rhône, Saône-et-Loire, Seine-et-Marne, Yonne மற்றும் Essonne ஆகிய 22 மாவட்டங்களில் இடி மின்னல் மற்றும் மழை காரணமாக மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.