எரிபொருள் விலைகள் மீண்டும் வீழ்ச்சியில்...

22 சித்திரை 2025 செவ்வாய் 18:40 | பார்வைகள் : 1031
எரிபொருள் விலைகள் கடுமையாக குறைந்துள்ளன. டீசல் லிட்டருக்கு சராசரியாக 1.53 யூரோவும், SP95-E10 1.62 யூரோவாகவும் விற்கப்படுகின்றன.
கடந்த வாரம் மட்டும் இவைகளின் விலை 5 சதவீதம் குறைந்தது. 10,000 எரிபொருள் நிலையங்களின் தரவுகளின்படி, 16% நிலையங்களில் டீசல் 1.50 யூரோவிற்கும் குறைவாக, SP95-E10 1.60 யூரோவிற்கும் குறைவாக விற்பனை செய்யப்படுகிறது.
நாட்டின் குறைந்த விலையுள்ள நிலையமாக Seine-Maritime-இல் உள்ள E.Leclerc நிலையம் திகழ்கிறது.
இந்த விலைக்கழிவுக்கு முக்கிய காரணம் உலக வர்த்தக போர் மற்றும் எண்ணெய் தேவையில் ஏற்பட்ட மந்தநிலைகளாகும். டிரம்பின் வரி நடவடிக்கைகள், எதிர்பார்ப்புகளைக் குறைத்தமை மற்றும் யூரோவின் மதிப்பு உயர்ந்தது ஆகியவை கூடுதலான விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது.
ஆனால் இந்த குறைந்த விலைகள் நீடிக்கும் என்பது உறுதி இல்லை; புதிய வரி நடவடிக்கைகள் அல்லது அரசியல் பதற்றம் விலையை மீண்டும் உயரக்கூடும்.