ஆபாச இணையத்தளங்களுக்கு தடை!

22 சித்திரை 2025 செவ்வாய் 16:14 | பார்வைகள் : 2039
பிரான்சில் இயங்கும் இரு இணையத்தங்கள் அண்மையில் கொண்டுவந்திருந்த சட்டத்திருத்தத்தின் படி இயங்கவில்லை என தெரிவிக்கப்பட்டு, அவை முடக்கப்படும் அபாயத்துக்கு உள்ளானதாக தெரிவிக்கப்படுகிறது.
ஆபாசத்தளங்களில் முகப்பில் வயதை உறுதி செய்யும் ஒரு அறிவிப்பை காட்சிப்படுத்தவேண்டும் என்பது அண்மையில் கொண்டுவந்திருந்த சட்டமாகும். சென்ற 2024 ஆம் ஆண்டு மே மாதத்தில் இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டிருந்தது. அதை அடுத்து பிரான்சில் அனுமதிக்கப்பட்ட்டுள்ள இணையத்தங்கள் பலவற்றில் அவை காட்சிப்படுத்தப்பட்டு வருகின்றன.
ஆனால், முக்கியமான இரு இணையத்தளங்கள் அதனைக் காட்சிப்படுத்த தவறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவற்றுக்கு 15 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அதற்கும் மேற்குறித்த வகையில் தளம் வடிவமைக்கப்படாவிட்டால், அவை முடக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.