Paristamil Navigation Paristamil advert login

சிவகார்த்திகேயன் கார்த்திக் சுப்பராஜ் புதிய கூட்டணி

 சிவகார்த்திகேயன் கார்த்திக் சுப்பராஜ் புதிய கூட்டணி

22 சித்திரை 2025 செவ்வாய் 15:26 | பார்வைகள் : 2486


இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வருகிறார். தற்போது நடிகர் சூர்யாவை வைத்து 'ரெட்ரோ' என்கிற படத்தை இயக்கியுள்ளார். பூஜா ஹெக்டே, ஜோஜு ஜார்ஜ், நாசர், ஜெயராம் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இப்படம் வருகின்ற மே 1ம் தேதி அன்று திரைக்கு வருகிறது.

இந்த படத்திற்கு பிறகு கார்த்திக் சுப்பராஜ் அவரது அடுத்த படத்திற்கான பணிகளை இப்போதே துவங்கியுள்ளார் என்கிறார்கள். சமீபத்தில் நடிகர் சிவகார்த்திகேயனை சந்தித்து புதிய படத்திற்கான கதையை கூறியுள்ளார் கார்த்திக் சுப்பராஜ். அந்த கதை சிவகார்த்திகேயனுக்கு பிடித்துள்ளதால் சம்மதம் தெரிவித்துள்ளார். ஆனால் சிவகார்த்திகேயன் கைவசம் அடுத்தடுத்து படங்கள் இருப்பதால் கால்ஷீட் உள்ளிட்ட பிரச்னையால் இழுபறி நீடிக்கிறதாம்.

வர்த்தக‌ விளம்பரங்கள்