தாக்குதல் நடத்திய அர்ச்சுனாவுக்கு அழைப்பாணை விடுத்த நீதிமன்றம்

22 சித்திரை 2025 செவ்வாய் 14:21 | பார்வைகள் : 690
யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் அர்ச்சுனா ராமநாதனை செப்டம்பர் 25 ஆம் திகதி மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு கொழும்பு மேலதிக நீதவான் மஞ்சுள ரத்நாயக்க செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டார்.
வீதி விபத்தில் ஒருவரைத் தாக்கி பலத்த காயங்களை ஏற்படுத்தியதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
சந்தேக நபரான பாராளுமன்ற உறுப்பினர், 2021மார்ச் 22, அன்று பேஸ்லைன் வீதியில் ஒரு கார் விபத்தை ஏற்படுத்தி, வாகனத்தில் இருந்தவருக்கு பலத்த காயங்களை ஏற்படுத்தியதாக கிராண்ட்பாஸ் பொலிஸார் தாக்கல் செய்த புகாரில், சந்தேக நபரை சாட்சியமளிக்க ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டது.
சந்தேக நபர் நீதிமன்றத்தில் ஆஜரானார், மேலும் தாக்கப்பட்டு பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் லசந்த அபேவர்தன நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (22) சாட்சியமளித்தார்.