Pas-de-Calais மாவட்ட ஆலோசகர் பதவி நீக்கத்துக்கு எதிராக வழக்கு தொடரும் மரின் லு பென்...
22 சித்திரை 2025 செவ்வாய் 13:14 | பார்வைகள் : 4305
மரின் லு பென், RN கட்சியின் தலைவர், பா-து-கலே பிராந்திய ஆலோசகர் பதவியில் இருந்து அவரது விருப்பமின்றி நீக்கப்பட்டதை எதிர்த்து லில்(Lille)நிர்வாக நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
இது, ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்ற உதவியாளர்கள் முறைகேடு வழக்கில் ஏற்கனவே வழங்கப்பட்ட ஐந்து வருட தேர்தல் தகுதியிழப்பு மற்றும் நான்கு ஆண்டு சிறைத்தண்டனை (இரண்டு ஆண்டு நேரடி சிறை) தீர்ப்பின் தொடர்ச்சியாகும்.
மொத்த மோசடி 4.4 மில்லியன் யூரோக்கள் மதிப்புடையது. மலின் லு பெனின் கூட்டாளியான Steeve Briois, தீர்ப்பு உறுதியாகும் வரை அவர் இன்னும் பிராந்திய ஆலோசகராகவே உள்ளார் எனவும், இந்த வழக்கு அவமதிப்பும் நீதியற்றதுமானதுமாக இருப்பதாகவும் கூறியுள்ளார்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan