மெலோன்சோனின் ட்ரம்ப் எதிர்ப்புவாதம்!!

22 சித்திரை 2025 செவ்வாய் 11:53 | பார்வைகள் : 710
கடந்த சில நாட்களாக கனடாவிற்கும் அமெரிக்காவிற்கும் பயணம் மேற்கொண்ட பிரோன்ஸ் அன்சூமி கட்சியின் (La France insoumise) தலைவர் ஜோன் லுக் மெலோன்சோன், தனது பயணத்தை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பினை மிக மோசமாக விமர்சிப்பதற்குப் பயன்படுத்திக் கொண்டார்.
அமெரிக்காவின் இடதுசாரிக் கட்சியினருடன் தொடர்பை ஏற்படுத்துவதற்கு முன்னரே ட்ரம்பை விமர்சிக்க ஆரம்பித்திருந்தார்.
தனது 'இன்னும் சிறப்பாகச் செய்!' குடிமக்கள் புரட்சியை நோக்கி' எனும் «Faites mieux ! Vers la révolution citoyenne» நூலை வெளியிடவே கனடாவிற்கும் அமெரிக்காவிற்கும் சென்றுள்ளார்.
«டொனால்ட் டரம்ப் ஒரு சமூகப் புரட்சியின் ஆரம்பமாக இருக்கப்போகின்றார். அமெரிக்கர்கள் தங்களின் பொருட்களின் அதியுச்ச விலையேற்றத்தைச் சந்திக்கும் பொழுது புரட்சி ஏற்படும், சுங்கவரி ஏற்றுதல் நாட்டைக் காப்பாற்றப் போவதில்லை» என ஒரு பல்கலைக்கழகத்தில் தன் கருத்தை மெலோன்சோன் வெளியிட்டுள்ளார்.
அமெரிக்க மக்களின் நிலையில் கரிசனம் செய்யும் மெலோன்சோன், பிரான்சில் பொருட்களின் விலை அதியுச்சமாகி, மக்களின் கொள்வனவுத் திறன் கேள்விக்குறியாகியிருக்கும் நிலையில், இங்கு ஏன் அதே சமூகப்புரட்சியை ஏற்படுத்தவில்லை என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.