நேற்றிரவும் தாக்குதல்!! பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினர் களத்தில்!

22 சித்திரை 2025 செவ்வாய் 09:24 | பார்வைகள் : 2789
தொடர்ச்சியான சிறைத்தாக்குதல்களில், நேற்றிரவு இல்-து-பிரான்சின் அருகாமையிலும் தாக்குதல் நடந்துள்ளது.
போவேயின் (Beauvais - Oise), அருகிலுள்ள Mouy இல் இந்தத் தாக்குதல்கள் நடந்துள்ளது. இங்கும் வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.
அதேநேரம், Villefontaine (Isère) இலுள்ள அமைதியான குடியிருப்புப் பகுதியில், வசிக்கும் சிறையதிகாரியின் வீட்டிற்கு பெற்றோல் குண்டுத் தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது.
இந்தத் தாக்குதல்களைப் பரிசின் பயங்கரவாதத் தடுப்புப்பிரிவினர் விசாரணை செய்து வருகின்றனர்.
காவற்துறையினதும், பயங்கரவாதத்தடுப்புப் பிரிவினதும், துரித நடவடிக்கைகளை நீதியமைச்சர் ஜெரால்ட் தர்மனமன் பாராட்டி உள்ளார்.
4 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

காசிப்பிள்ளை இராஜலிங்கம்
செவ்ரோன் - பிரான்ஸ:, நயினாதீவு 7ம் வட்டாரம்
வயது : 79
இறப்பு : 28 Aug 2025