Pas-de-Calais : 46 அகதிகள் கடலில் இருந்து மீட்பு!!
.jpeg)
22 சித்திரை 2025 செவ்வாய் 09:00 | பார்வைகள் : 5845
Pas-de-Calais கடற்பிராந்தியம் வழியாக பிரித்தானியா நோக்கி படகில் பயணித்த 46 அகதிகளை கடற்படையினர் மீட்டுள்ளனர்.
ஏப்ரல் 21, திங்கட்கிழமை அதிகாலை கடற்படையினர் பல தடவைகள் உதவிக்கு அழைக்கப்பட்டனர். அதை அடுத்து படகு ஒன்றில் பயணித்த அகதிகள் மூழ்கும் நிலையில் இருப்பதை பார்த்து அவர்கள் அனைவரையும் மீட்புப்படையினர் மீட்டனர். அவர்களது படகின் இயந்திரம் பழுதடைந்து இயக்க முடியாமல் கடலில் தத்தளித்துக்கொண்டிருந்துள்ளது.
மொத்தமாக 46 அகதிகள் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
காலே மற்றும் பிரித்தானியாவின் டோவர் பகுதியை இணைக்கும் ஆங்கிலக்கால்வாய் மிகவும் நெருக்கடியான பகுதியாகும். நாள் ஒன்றுக்கு 600 இற்கும் மேற்பட்ட சரக்கு கப்பல்கள் அதில் பயணிக்கின்றன. அதன் இடையே படகுகளில் பயணிப்பது பேராபத்தை ஏற்படுத்தும் என தெரிவிக்கப்படுகிறது.
2 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

காசிப்பிள்ளை இராஜலிங்கம்
செவ்ரோன் - பிரான்ஸ:, நயினாதீவு 7ம் வட்டாரம்
வயது : 79
இறப்பு : 28 Aug 2025