புயலால் பாதிக்கப்பட்ட பகுதியில் மக்ரோன்! தனிநாடாகுமா மயோத்!!!

21 சித்திரை 2025 திங்கள் 21:39 | பார்வைகள் : 1246
இந்தியப் பெருங்கடலில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் எமானுவல் மக்ரோன், முதற்கட்டமாக மயோத்தில் சிதோ புயலினால் பேரழிவு நடந்த இடங்களைப் பார்வையிட்டார்.
இந்தச் சேதங்களிற்கு நிவாரணமாக மூன்று பில்லியன் யூரோக்கள் ஒதுக்கவதாக உறுதியளித்துள்ளார். ஆனால் இது ஆறு வருடங்களிற்குப் பிரித்தே வழங்கப்படும் எனவும் எமானுவல் மக்ரோன் தெரிவித்துள்ளார்.
பிரான்சின் மாகாணங்களில், மிகவும் வறுமையான மாகாணமான மய்யோத், கடந்த டிசம்பர் மாதத்தில் மிகக் கொடூரமான சிதோ புயலினால் பெரும் பதிப்பிற்கு உள்ளாகியது.
இதில் 40 பேர் பொல்லப்பட 3.5 பில்லியன் சொத்துக்கள் சேதமடைந்துள்ளது.
நான்கு மாதங்கள் கழித்தே நிவாரணத்திற்கான உறுதியை மக்ரோன் வழங்கியுள்ளார்!!
மய்யோத் மக்கள் பிரான்சிலிருந்து பிரிந்து தனிநாடாக இயங்க பெரு விருப்பைத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இதற்கான பொது வாக்கெடுப்பிற்கான கோரிக்கையும் வலுத்து வருகின்றது.