பிரான்சின் அதிக வயதுடைய பிரதமர் பய்ரூ!!

21 சித்திரை 2025 திங்கள் 21:37 | பார்வைகள் : 623
பிரோன்சுவா பய்ரூ பிரான்சின் ஐந்தாவது குடியரசின், வயது அதிகமான முதல் பிரதமராவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று திங்கட்கிழமையுடன் இவரே அதிக வயதுடைய பிரதமர் ஆவர். இன்றுடன் இவரிற்கு 73 வயதும் பத்து மாதங்களும் 27 நாட்களும் வயதாகின்றது.
இதற்கு முந்தைய பிரதமரான மிசேல் பார்னியே இராஜினாமாச் செய்தபோது அவரிற்கு 73 வயதும் பத்து மாதங்களும் 26 நாட்களுமாகவே வயது இருந்தது.
இதற்கு அதிகமாக ஒரு நாள் தாண்டியும் பய்ரூ பதவியில் இருப்பதால், இவரே அதிக வயதுடைய பிரதமர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.