விற்பனையில் ராயல் என்ஃபீல்டு படைத்த புதிய வரலாறு

21 சித்திரை 2025 திங்கள் 15:25 | பார்வைகள் : 286
ராயல் என்ஃபீல்டு (Royal Enfield) நிறுவனம் பைக் விற்பனையில் புதிய வரலாறு படைத்துள்ளது.
இந்தியாவின் பிரபலமான ராயல் என்ஃபீல்டு நிறுவனம் சாமான்ய மக்களின் நம்பிக்கையை பெற்றதுடன், வருடத்திற்கு 10 லட்சம் மோட்டார் சைக்கிளை விற்பனை செய்து புதிய சாதனை படைத்துள்ளது.
2024–25 நிதியாண்டில், ராயல் என்ஃபீல்டு 1,009,900 யூனிட்கள் விற்பனை செய்துள்ளதாக அதிகாரபூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது கடந்த ஆண்டைவிட 11 சதவீத அதிகரிப்பை பதிவு செய்கிறது.
மார்ச் மாதத்தில் மட்டும் 1,01,021 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன - இது 34 சதவீத வளர்ச்சி என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த சாதனையில் முக்கிய பங்காற்றி பைக் மொடல்:
• Hunter 350 - இளம் தலைமுறையை கவர்ந்த மொடல்
• Super Meteor 650 - வின்டேஜ் க்ரூசர் வடிவமைப்பில், Mid Range பிரிவில் வரவேற்பு பெற்றது
• Bullet Battalion Black, Classic 350, Scram 440, Guerrilla 450 போன்ற புதிய மொடல்களும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன.
• வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி
• உள்நாட்டின் மட்டுமின்றி, வெளிநாடுகளிலும் விற்பனை உயர்ந்துள்ளது. தாய்லாந்தில் புதிய அசெம்ப்ளி பிளான்ட் தொடக்கம், பங்களாதேஷ் சந்தையில் நுழைவது போன்ற
நடவடிக்கைகள் வளர்ச்சிக்கு வித்திட்டன.
• மின்சார மோட்டார் சைக்கிள்
• “Flying Flea” எனும் புதிய எலக்ட்ரிக் பிராண்டுடன், ராயல் என்ஃபீல்டு மின்சார சுழற்சியில் கால் வைக்க தயாராக உள்ளது.
• சிறந்த வில, அழகிய வடிவமைப்பு, உயர்ந்த நம்பிக்கை எனும் மூன்றின் செழிப்பால், ராயல் என்ஃபீல்டு தற்போது உலகம் முழுவதும் சாதனைபடைக்கும் நிறுவனமாக மாறியுள்ளது.