சீன நிறுவனங்கள் மீது அமெரிக்கா விதித்த தடை

21 சித்திரை 2025 திங்கள் 15:21 | பார்வைகள் : 772
ஈரானுடன் வர்த்தக பரிவர்த்தனைகளில் ஈடுபடுவதாகக் குற்றம் சாட்டி, சீன எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மற்றும் கப்பல் நிறுவனங்கள் மீது அமெரிக்கா தடைகளை விதித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஈரானிய கச்சா எண்ணெய் வாங்கியதற்காக சீன எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மற்றும் கப்பல் நிறுவனங்கள் மீது அமெரிக்கா தடைகளை விதிப்பது இது இரண்டாவது முறையாகும்.
அமெரிக்காவால் தீவிரவாத அமைப்பாக முத்திரை குத்தப்பட்ட ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படையால் ஈரானின் கச்சா எண்ணெய் ஏற்றுமதி கட்டுப்படுத்தப்படுவதே இதற்குக் காரணம் என்று வெளிநாட்டு ஊடக அறிக்கை கூறுகிறது.