Paristamil Navigation Paristamil advert login

வியர்க்குரு பிரச்சனை சர்க்கரை நோயாளிகளுக்கு அதிகம் வருமா?

 வியர்க்குரு பிரச்சனை சர்க்கரை நோயாளிகளுக்கு அதிகம் வருமா?

21 சித்திரை 2025 திங்கள் 14:08 | பார்வைகள் : 350


வேர்க்குரு அல்லது வெப்ப சொரி, மருத்துவ ரீதியாக மிலியாரியா என்று அழைக்கப்படுகிறது. இது பெரும்பாலும் குழந்தைகளில் ஏற்படும் ஒரு தோல் பிரச்சனையாகும். 

முகம், கழுத்து, மார்பு, இடுப்பு மற்றும் தோள்பட்டைகளில் இது அதிகம் காணப்படும். கோடை பருவத்தில் அதிக வெப்பம் மற்றும் ஈரப்பதம் காரணமாக, தோல் சுரப்பிகள் மறைந்து கெட்டுப்போகும் போது, சிறிய துளிகள் அல்லது பிசுபிசுப்பு தோல் பாதிப்புகள் ஏற்படும்.
 
மிலியாரியா கிரிஸ்டலினா (படிக வேர்க்குரு), மிலியாரியா ருப்ரா (சிவப்பு வேர்க்குரு) மற்றும் மிலியாரியா ப்ரோஃபுண்டா (உட்புற வேர்க்குரு) ஆகிய மூன்று வகைகள் உள்ளன. இதன் முக்கிய காரணிகளாக அதிக வெப்பம், ஈரப்பதம், காய்ச்சல், மரபணு காரணங்கள், உடல் பருமன் மற்றும் புகைப்பழக்கம் உள்ளன.
 
சர்க்கரை நோயாளிகள் பெரும்பாலோருக்கு காணப்படும் நரம்பு பாதிப்பு  மற்றும் ரத்த நாளங்களின் அடைப்புகளால்   தோல் வறட்சி ஏற்பட்டு வியர்க்குரு அதிகம் வர வாய்ப்புகள் உண்டு.
 
இதன் தீர்வுக்கு சில முக்கிய அறிவுரைகள்:
 
குளிர்ந்த மற்றும் காற்றோட்டமான இடத்தில் தூங்க வேண்டும்.
 
இறுக்கமான ஆடைகளை தவிர்த்து, தளர்வான பருத்தி துணிகளை அணியவும்.
 
சருமத்திற்கு உபாதையளிக்கும் பொருட்களை தவிர்க்கவும்.
 
வெப்பத்தில் அதிக நேரம் கழிக்காமல், குடையை அணியவும்.
 
தினசரி 3-4 லிட்டர் தண்ணீர் குடியுங்கள்.
 
பெரும்பாலான வேளையில், வேர்க்குரு தானாக சரி ஆகும். ஆனால், தொடர்ந்து வலி ஏற்படும் பட்சத்தில், மருத்துவ உதவிக்கான ஆலோசனை பெறுவது அவசியம்.
 

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்