Paristamil Navigation Paristamil advert login

விசாரணைக்கு முன்னிலையாகுமாறு ரணிலிடம் கோரிக்கை

விசாரணைக்கு முன்னிலையாகுமாறு ரணிலிடம் கோரிக்கை

21 சித்திரை 2025 திங்கள் 12:20 | பார்வைகள் : 468


முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்த வாரம் இலஞ்சம் மற்றும் ஊழல் பற்றிய சாத்துதல்களைப் புலனாய்வு செய்யும் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளார்.

அதன்படி, ஏப்ரல் 25 ஆம் திகதி காலை 09.30 மணிக்கு ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு முன்னாள் ஜனாதிபதியிடம் கோரப்பட்டுள்ளது.

பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்கவுக்கு எதிரான முறைப்பாடு தொடர்பான விசாரணை குறித்து வாக்குமூலம் பதிவு செய்வதற்காக ரணிலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 

முன்னாள் ஜனாதிபதி முன்னர் ஏப்ரல் 17 ஆம் திகதி இலஞ்ச ஊழல் புலனாய்வு ஆணைக்குழுவிற்கு முன் அழைக்கப்பட்டார், ஆனால் அவர் தான் அப்போது சமூகமளிக்க முடியாது என்று தெரிவித்திருந்தார்.

இதனால், வாக்குமூலம் பதிவு செய்ய ஆணைக்குழு மாற்று நாளை அறிவித்துள்ளது. 

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்