இலங்கையில் மின்னல் தாக்கி நான்கு பிள்ளைகளின் தாய் உயிரிழப்பு

21 சித்திரை 2025 திங்கள் 10:27 | பார்வைகள் : 450
குடா ஓயா, மஹயாய பிரதேசத்தில் மின்னல் தாக்கி நான்கு பிள்ளைகளின் தாய் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது.
எத்திலிவெவ, மஹயாய பிரதேசத்தைச் சேர்ந்த 38 வயதுடைய தாய் ஒருவரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இவர் தனது வீட்டுக்கு அருகில் உள்ள காணியில் வேலை செய்துக்கொண்டிருக்கும் போது மின்னல் தாக்கி காயமடைந்துள்ளார்.
இதனையடுத்து காயமடைந்தவர் தெஹிகஸ்ஹந்திய பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.